உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வேனை மறித்து வழிப்பறிதா.பேட்டை அருகே 4 பேர் கைது

வேனை மறித்து வழிப்பறிதா.பேட்டை அருகே 4 பேர் கைது

தா.பேட்டை: தா.பேட்டை அருகே லோடு வேனை மறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர்.துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் நூல் வியாபாரி தங்கராசு(38). இவர் சம்பவத்தன்று லோடு வேனில் நூல் ஏற்றிக்கொண்டு ஈரோட்டில் இருந்த ஜெம்புநாதபுரம் வழியாக கொப்பம்பட்டிக்கு நேற்று காலை 10 மணியளவில் சென்றுள்ளார். அப்போது, ஜெம்புநாதபுரம் அருகே வேன் மீது கல்வீசிய சத்தம் கேட்டுள்ளது. இதனால், வேனை நிறுத்தி விட்டு டிரைவரும், நூல் வியாபாரி தங்கராசும் வேனை பார்த்துள்ளனர். திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி தங்கராசுவிடம் இருந்து 34 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர்.சம்பவம் குறித்த தங்கராசு தா.பேட்டை போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ