உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / டி.ஆர்.பி., கல்லூரியில் பேரவை துவக்க விழா

டி.ஆர்.பி., கல்லூரியில் பேரவை துவக்க விழா

மண்ணச்சநல்லூர்: இருங்களுர் டி.ஆர்.பி., பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தொடர்பியல் துறை (இ.சி.இ.,) பேரவை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஹைதராபாத்தைச் சேர்ந்த டி.சி.எஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேரவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.விழாவில், இருங்களுர் எஸ்.ஆர்.எம். வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் பேசினார். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தமிழரசன் ஆலோசனைப்படி இ.சி.இ., துறைத்தலைவர் ரம்யா, ஒருங்கிணைப்பாளர் அகிலாண்டேஸ்வரி, பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில், வணிக மேலாளர் கிருஷ்ணசாமி, துறைத்தலைவர் முருகானந்தம், பணியிடப்பிரவு அலுவலர் விக்டர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை