உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்

காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்

மணப்பாறை: காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸில் தஞ்சமடைந்தனர். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் மகள் வான்மதி(26). பி.ஹெச்.எம்.எஸ்., முடித்துவிட்டு ஹோமியோபதி டாக்டராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 16ம் தேதி கொடுமுடி கோவிலில் திருமணம் செய்துள்ளனர். மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி இருவரும் தஞ்சமடைந்தனர். எஸ்.ஐ., லதா இருதரப்பு பெற்றோரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வான்மதியின் பெற்றோர் வரமறுத்துவிட்டனர். ஆனால், ராஜேஸின் தந்தை கருப்பையா, மகனையும், மருமகளையும் அழைத்துச் செல்வதாக கூறியதை அடுத்து இருவரை கருப்பையாவுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி