உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கொடி கம்பியில் ஷாக் அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்

கொடி கம்பியில் ஷாக் அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்

திருச்சி : திருச்சியில், மின்கசிவு கொடி கம்பியை தொட்ட பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 63; எலக்ட்ரீஷன். இவரது மனைவி தேன்மொழி, 57. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. வீட்டில் கட்டியிருந்த கொடிக்கம்பியில் மின்கசிவு குறித்து, இவர், தன் கணவரிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, எதனால் மின்கசிவு என, அவர் பார்த்து கொண்டிருந்த போது, கொடிக்கம்பியை தேன்மொழி தொட்டுள்ளார். இதனால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மனைவியை காப்பாற்ற கணவர் முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டனர்.பொன்மலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ