உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மற்றொரு சிலிண்டருக்கு காஸ் மாற்றிய போது தீ விபத்து

மற்றொரு சிலிண்டருக்கு காஸ் மாற்றிய போது தீ விபத்து

வேலுார்:சமையல் காஸை, மற்றொரு சிலிண்டருக்கு மாற்றும்போது தீ பிடித்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்.வேலுார் அருகே, காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி, 54; சமையல் காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் பணி செய்பவர். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டில் ஒரு சமையல் காஸ் சிலிண்டரில் இருந்து, மற்றொரு சிலிண்டருக்கு காஸ் மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் தீப்பிடித்தது. இதில், முத்துசாமி உடல் மீது தீ மளமளவென பரவியது. வீட்டு ஜன்னல், கதவு உள்ளிட்டவற்றிலும் தீ பிடித்து எரிந்தது.அவரது குடும்பத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காட்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர் முத்துசாமியை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை