உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பொங்கல் கொண்டாட 17 கைதிகளுக்கு பரோல்

பொங்கல் கொண்டாட 17 கைதிகளுக்கு பரோல்

வேலுார்; பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட, சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகள், பரோல் கேட்டு விண்ணப்பங்களை அளிக்கின்றனர். இவை பரிசீலிக்கப்பட்டு அவர்களின் நன்னடத்தையை கருதி, சிறை நிர்வாகம் பரோல் வழங்குகிறது. அதன்படி, பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாட, வேலுார் மத்திய சிறையில், 35 சிறை கைதிகள் விண்ணப்பித்தனர். இதை பரிசீலித்த உயரதிகாரிகள், 17 கைதிகளுக்கு பரோல் வழங்கினர். இதையடுத்து அந்த கைதிகள், பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர். வரும், 17ம் தேதி திரும்ப, அவர்களுக்கு சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி