உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்

கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வேலூரில் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ மாணவிகள் பேரணியாக வந்து போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.வேலுாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பேராய கட்டுப்பாட்டில் இயங்கும், ஊரீஸ் கல்லுாரியில், கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன், பி.எச்டி., படிப்பிற்காக, 25 வயது மாணவி சேர்ந்தார். இவருக்கு வழிகாட்டி பேராசிரியராக கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன், 52, இருந்தார். அவர் அப்பெண்ணை, தான் பணியாற்றிய துறையில்,கவுரவ விரிவுரையாளராக நியமித்து, பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பாதிக்கப்பட்ட மாணவி, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால், வேலுார் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன் மீது, 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கல்லூரி மாணவ, மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அண்ணா சாலை வழியாக பேரணியாக வந்து மகளிர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவ, மாணவிகளுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kanns
மார் 22, 2025 06:26

This may be False Case, though it should Proceed. But PowerMisusing NewsHungry Gangs& Girl Pressurising Police to Act Against Must be Arrested for Misusing Laws


MARUTHU PANDIAR
மார் 21, 2025 21:52

கொலைகள் குறைச்சலா தான் நடக்குதுன்னு சொன்னது மாதிரி பாலியல் கொடுமைகளும் கொறச்சலா தான் நடக்குதுன்னுந் சொல்லிடுவாங்க .அப்போ என்ன பண்ணுவீங்க ??????


Perumal Pillai
மார் 21, 2025 18:56

படிக்க போனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் போல.


Perumal Pillai
மார் 21, 2025 18:13

பாதிக்கப்பட்ட மாணவி, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால்,வெளங்கிடும் விளங்கிடும்


Mani
மார் 21, 2025 17:49

பலமுறை ஹா ஹா ஹா


Padmasridharan
மார் 21, 2025 17:33

இந்த செய்தியில் கல்லூரியின் பெயர் வந்த மாதிரி மற்ற சில கல்லூரியின் பெயர்கள் மற்ற செய்திகளில் வெளியிடப்படுவதில்லையே, ஏன். "புகாரை வாங்க மறுத்ததால்.. " இது போன்று எல்லா காவல் நிலையங்களிலும் பேச்சு வார்த்தை என்று பணத்தை அதிகார பிச்சை எடுக்கிறார்கள். அதனால் பாலியல் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. திருவான்மியூரில் இப்படி எனக்கு தெரிந்த 2 குற்றங்களும் மறைத்திருக்கின்றனர். காவலர்களே, மிரட்டி அறைக்கு அழைத்து செல்கின்றனர்


என்றும் இந்தியன்
மார் 21, 2025 17:27

கவுரவ விரிவுரையாளராக நியமித்து, பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.????அப்போது பொறுமை காத்த இந்த பெண் தனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டவுடன் அந்த பாலியல் தொல்லை சரியில்லை என்று போலீசில் புகார். முதல் தடவை அது பாலியல் தொல்லை. பல தடவை பாலியல் தொல்லை ஆனால் இப்போது புகார் என்றால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம் -


Ramesh Sargam
மார் 21, 2025 17:23

ஏம்பா summaa புரளி கிளப்புறீங்க. என் ஆட்சியில் குற்றங்களா, appdeennu mudhalvar ketpaar.


sankaranarayanan
மார் 21, 2025 17:21

இதெல்லாம் திராவிட மாடல் அரசு நடத்தும்போது சகஜமப்பா இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்


Sampath Kumar
மார் 21, 2025 17:17

அன்பழகன் என்று பெயரு இருந்தால் அப்படித்தான் இருப்பாரு ஹி ஹி பலத்த நினைப்புதாண்டா பேராண்டி உ.பீஸ் கோவிக்க வேண்டாம்


புதிய வீடியோ