உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / முதல்வர் வருகையால் ட்ரோன் பறக்க தடை

முதல்வர் வருகையால் ட்ரோன் பறக்க தடை

வேலுார், வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி, திருப்பத்துார் கலெக்டர் சிவசவுந்திரவல்லி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி, 25ம் தேதி (நாளை) முதல், 26ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, மாவட்டங்களில் 'ட்ரோன்' மற்றும் விளம்பர பலுான்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை