உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மனைவி பிரிந்து சென்றதால் போதையில் கழுத்தை அறுத்து கொண்ட கணவர்

மனைவி பிரிந்து சென்றதால் போதையில் கழுத்தை அறுத்து கொண்ட கணவர்

குடியாத்தம்,குடியாத்தம் அருகே, மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், மது போதையில் கூலி தொழிலாளி கழுத்தை அறுத்து கொண்டார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்திவேல், 29, இவரது மனைவி முத்துலட்சுமி, 27. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். முத்துலட்சுமி தனது கணவர் சக்திவேலுவுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், சக்திவேல் இரு நாட்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சக்திவேல், கொசஅண்ணாமலை தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், ஒரு கடை முன் அமர்ந்து பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.ரத்த வெள்ளத்தில் இருந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால், மன விரக்தியில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில், தனது கழுத்தை, தானே அறுத்து கொண்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை