உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / 6 குழந்தைகளின் தந்தை குடும்ப தகராறில் தற்கொலை

6 குழந்தைகளின் தந்தை குடும்ப தகராறில் தற்கொலை

வேலுார்:வேலுார் அருகே குடும்ப தகராறில், ஆறு குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் மாவட்டம், மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 45; தமிழக விவசாயிகள் சங்க அணைக்கட்டு மேற்கு ஒன்றிய அமைப்பாளர். இவரின் மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஐந்து மகள், ஒரு மகன் உள்ளனர்.குடும்ப சூழ்நிலையால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தண்டபாணி, விஷ தழையை தின்று விட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார்.வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி