உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / போதை பழக்கத்திற்கு அடிமையானதில் முக்கியமானவர்கள் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தகவல்

போதை பழக்கத்திற்கு அடிமையானதில் முக்கியமானவர்கள் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தகவல்

வேலுார்:வேலுார் கலெக்டர் அலு வலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில் சிறுபான்மையினர்களுட னான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், வேலுார் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். பின், ஆணைய தலைவர் அருண் அளித்த பேட்டி: சிறுபான்மையினர் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் உள்ளதாக கூறப்படுகிறது. வக்ப் போர்டு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும் என அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை வந்துள்ளது. இவற்றை அரசுக்கும், வக்ப் போர்டு கவனத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் முக்கியமானவர்கள் சிறுபான்மையினர். இவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. பவுத்தர்கள் புத்த பூர்ணிமாவிற்கு செல்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் அவர்கள் நாக்பூர் சென்று வந்த பிறகு அளிக்கப்படுகிறது. அதை முன்னதாகவே வழங்க கேட்டுள்ளனர். கபர்ஸ்தானுக்கு இடம் வேண்டுமென தமிழகம் முழுதும் 400 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தில் இருந்து வழங்கப்படும் நிதியில், 40 சதவீதம் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரிஞ்சிபுரம் பகுதியில் வக்ப் போர்டு நிலத்தை விற்பனை செய்ததாக தேசிய அளவில் பிரச்னையானது. வக்பு போர்டு தலைவர் இது குறித்து விசாரிக்கிறார். உருது ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !