அனுமதி பெறாமல் கன்று விடும் விழா போலீசாரால் நின்றது
வேலுார்: வேலுார் மாவட்டம் ஒடுகத்துாரை அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., அனந்தபுரத்தில், வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அரசு அனுமதி பெறாமல் அப்பகுதி இளைஞர்கள் காளைக்கன்று விடும் திருவிழாவுக்கு ஏற்-பாடு செய்திருந்தனர். நேற்று காலை, 11:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் என்றும், நுழைவு கட்டணம், 500 ரூபாய் எனவும் அறிவித்தனர். இதனால் காலை முதலே, பல்-வேறு பகுதி இளைஞர்கள் கன்றுகளை, அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தினர். தகவலறிந்து வேப்பங்குப்பம் போலீசார் சென்றனர். இதனால் விழா ஏற்பாட்டாளர்கள், வனப்பகுதிக்குள் கன்றுகளை பிடித்து சென்று மறைந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிதறி ஓடினர். அரசு அனுமதியின்றி எருது விடும் விழா நடத்துவது, அதில் கலந்து கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்து, அங்கிருந்த இளைஞர்களை போலீசார் அனுப்பினர்.