உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஆசிரியர் கண்டித்ததால் பினாயில் குடித்த மாணவி

ஆசிரியர் கண்டித்ததால் பினாயில் குடித்த மாணவி

ஒடுகத்துார்; ஒடுகத்துார் அருகே, பினாயில் குடித்த மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்தார். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம், ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது, 10ம் வகுப்பு, 15, வயது மாணவி, சக மாணவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். அவரை, அமை தியாக இருக்கும் படி ஆசிரியர் கூறினர். ஆனாலும் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது, மாணவி பேசிக்கொண்டே இருந்ததால், அவரை ஆசிரியர் கண்டித்தார். இதனால் மாணவி, பள்ளி கழிப்பறைக்கு சென்று, அங்குள்ள பினாயில் எடுத்து குடித்து, மயங்கி விழுந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு, ஒடுகத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை