உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மர்ம காய்ச்சலுக்கு மாணவி பரிதாப பலி

மர்ம காய்ச்சலுக்கு மாணவி பரிதாப பலி

குடியாத்தம்,:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவை சேர்ந்தவர் லித்திகா, 11. இவர், அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லவில்லை.காய்ச்சல் அதிகமானதால், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !