கட்டிய 15 நாட்களில் இடிந்த கால்வாய்
வேலுார் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி, எட்டாவது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.எஸ்., நகரில், 15 நாட்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய கால்வாய், 200 மீட்டர் துாரத்துக்கு இடிந்து விழுந்தது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.