மேலும் செய்திகள்
அணைக்கட்டும் திட்டத்தால் ஆபத்தா? சீனா விளக்கம்
28-Dec-2024
அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே, டிராக்டர் கடன் தவணை கட்ட முடியாமல், மகனுடன் ஏற்பட்ட தகராறில், விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தண்டபாணி, 46. இவர், தனியார் பைனான்சில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். தவணையை சரியாக கட்ட முடியவில்லை.இது தொடர்பாக, அவருக்கும், மகன் கணேஷுக்கும் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த தண்டபாணி, பூச்சிக்கொல்லியை குடித்து விட்டு, 'நான் விஷத்தை குடித்து விட்டேன்; நீயும் குடித்து சாவு' என, மகன் கணேஷை திட்டினார்.இதில், கணேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததில், இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை குடும்பத்தினர் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதித்ததில், தண்டபாணி இறந்து விட்டது தெரிந்தது கணேஷ், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Dec-2024