உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கட்டட மேஸ்திரி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது

கட்டட மேஸ்திரி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது

பள்ளிகொண்டா:கட்டட மேஸ்திரி கொலையில், அவரது மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வெங்கடசாமி ரெட்டியூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன், 35; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கலைவாணி. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கந்தனேரியில் நேற்று முன்தினம் இரவு தேவேந்திரன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்தனர். தேவேந்திரன் மனைவி கலைவாணியிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதும், இதனால் கோபித்துக்கொண்டு ராணிப்பேட்டையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு கலைவாணி ஐந்து மாதங்களுக்கு முன் சென்றதும் தெரியவந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 27, என்பவருடன் கலைவாணிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. கணவர் அடிக்கடி தகராறு செய்வதாக, கலைவாணி, அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அருண்குமார், நேற்று முன்தினம் அணைக்கட்டு வந்துள்ளார். தேவேந்திரனை மொபைல் போனில் அழைத்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கல்லால் அடித்து கொலை செய்து தப்பி உள்ளார். ஆந்திர மாநிலம், நகரியில் பதுங்கியிருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். கலைவாணியையும் கைது செய்துள்ளனர்.

கோட்டை விட்ட போலீஸ்

கொலை நடந்த சில மணி நேரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அருண்குமாரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்துள்ளனர். அவரது கை, உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. போலீசார் கேட்டபோது, பைக்கில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். தீர விசாரிக்காமல், அவர் சொன்னதை நம்பி போலீசார் அவரை அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை