டில்லியில் இருந்தா சாப்பாடு வரும்?
டில்லியில் இருந்தா சாப்பாடு வரும்?
வேலுாரில் நேற்று, விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காலை 11:00 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், பெண்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். பெரும்பாலும் முதியவர்கள் இருந்தனர். ஆனால், அமைச்சர் தாமதமாக, 1:30 மணிக்கு வந்தார். அதுவரை விவசாயிகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் சிலர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயி ஒருவர், மத்திய அமைச்சரை முற்றுகையிட முயன்றார். பா.ஜ.,வினர் அந்த விவசாயியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தமிழக அரசு. அவர்களிடம் கேட்காமல், டில்லியில் இருந்து வரும் மத்திய அமைச்சரிடம் சாப்பாடு கேட்கலாமா? அவர் டில்லியில் இருந்தா சாப்பாடு கொண்டு வருவார்' என, பா.ஜ.,வினர் அந்த நபரை கண்டித்தனர். மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியை சீர்குலைக்க தி.மு.க.,வால் அனுப்பப்பட்ட கைக்கூலி எனவும் அவரை விமர்சித்தனர். மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த சலசலப்பை சற்றும் கண்டுகொள்ளாமல், விரிஞ்சிபுரம் போலீசார் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.