உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வாலிபர் கத்தியால் குத்திக்கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வேலுார், வேலுாரில், கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.வேலுார் மாவட்டம், ஓங்கபாடியை சேர்ந்தவர் பாபு மகன் கவுதம், 23, பட்டதாரி. இவர் வேலை தேடி வந்தார். இவரது அத்தை மகள் நிரோஷா. இவரது கணவர் கார்த்தி, 36, தொழிலாளி. போதைக்கு அடிமையான கார்த்தி, அடிக்கடி நிரோஷாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை கவுதம் அவ்வப்போது தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஜன., 28-ம் தேதி போதையில் கத்தியுடன் வந்த கார்த்தி, கவுதம் எங்கே என அவரது வீட்டில் தேடினார். அங்கு அவர் இல்லை என்றதும், கத்தியுடன் வெளியே சென்ற அவர், எதிரே பைக்கில் வந்த கவுதமை மறித்து, நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். வேப்பங்குப்பம் போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, வேலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் விசாரித்து, கார்த்திக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை