உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்திரைத்தீர்வை இழப்பு கட்டணம் வசூல் முகாம்

முத்திரைத்தீர்வை இழப்பு கட்டணம் வசூல் முகாம்

செஞ்சி: செஞ்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தீர்வை இழப்பு கட்டண வசூல் சிறப்பு முகாம் நடந்தது.செஞ்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் முத்திரைத்தீர்வை இழப்புக்கட்ண வசூல் சிறப்பு முகாம் நடந்தது. தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் மாவட்டப்பதிவாளர் கல்பனா, தணிக்கை மாவட்டப்பதிவாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.செஞ்சி சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட 20 ஆவணங்களுக்கான முத்திரைத்தீர்வை இழப்பு கட்டணம் ஆவணதாரர்களிடமிருந்து பொருப்பு சார்பதிவாளர் சீனிவாசன் வசூல் செய்து தீர்வு கண்டார். பணியாளர் சங்க திண்டிவனம் பதிவு மாவட்ட தலைவர் சடகோபன் மற்றும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை பணியாளர்கள் பங்கேற்றனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை