கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செஞ்சி: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செஞ்சி அடுத்த செம்மேடு ராஜ்ஸ்ரீ சார்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், வட்ட தலைவர் மாதவன், துணை தலைவர் நரசிம்மராஜன், இணை செயலாளர் சம்பத், சிவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிர்வாகிகள் சபாபதி, துரைசாமி, வெங்கடேசன், சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 5,500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை உடனே அறிவிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய சர்க்கரை லாபத்தொகையை விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.