வாசகர்கள் கருத்துகள் ( 1 )
There is No Dearth of False-Fabricated Cases esp by UnConstitutional CaseHungry All Women Police etc. Sack & Punish Without any Benefits
மேலும் செய்திகள்
தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
21-Aug-2024
விழுப்புரம்: பாலியல் வழக்கில் தொடர்புடைய 3 பேர், பாலியல் வன்புணர்ச்சி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் வாசு, 22; இவர், 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி, கடந்த 2021ம் ஆண்டு, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனை தொடர்ந்து, தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் பிரவீன்குமார், 23; என்பவர், சில மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனையறிந்த வாசுவும், அவரது நண்பரான ஒருகோடி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சரண்ராஜ், 28; ஆகியோர் சேர்ந்து, அதே சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த சிறுமியை தாக்கியுள்ளனர்.புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து வாசு, சரண்ராஜ், பிரவீன்குமாரை கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.இவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி உத்தரவின்படி, வாசு, சரண்ராஜ், பிரவீன்குமார் ஆகிய மூவரையும், பாலியல் வன்புணர்ச்சி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதற்கான உத்தரவு அவர்களிடம் வழங்கப்பட்டது.
There is No Dearth of False-Fabricated Cases esp by UnConstitutional CaseHungry All Women Police etc. Sack & Punish Without any Benefits
21-Aug-2024