உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆடு திருட முயன்ற 4 பேர் கைது

ஆடு திருட முயன்ற 4 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே அதிகாலையில் ஆடு திருட வந்த 4 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 57; விவசாயி. இவர், தனக்கு சொந்தமான 5 வெள்ளாடுகளை வீட்டருகே நேற்று முன்தினம் இரவு கட்டியிருந்தார்.நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பைக்குகளில் வந்த 4 பேர், 5 ஆடுகளை திருடி எடுத்துச் செல்ல முயன்றனர்.சத்தம் கேட்டு எழுந்த மணி, கிராம மக்கள் உதவியுடன் 4 பேரையும் பிடித்து, ரோஷணை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், திண்டிவனம், செஞ்சி ரோட்டைச் சேர்ந்த அர்ஜூன், 19; ஜாசிம் பாஷா, 20; கரியன் தெருவைச் சேர்ந்த ஜெகநாத், 19; மேல்பாக்கம் 16 வயது சிறுவன், என தெரியவந்தது. உடன் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை