மேலும் செய்திகள்
உதிரிபாகம் விற்போர் குறை கேட்பு கூட்டம்
13-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்கசிவால் பழைய வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் பழைய வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றனர். 9:00 மணிக்கு திடீரென கடையின் உள்ளேயிருந்து கரும்புகை வெளியேறியது.தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எரிந்து சேதமாகியது.
13-Aug-2024