உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.20 லட்சத்துடன் தலைமறைவானவர் கைது

ரூ.20 லட்சத்துடன் தலைமறைவானவர் கைது

விழுப்புரம்:விழுப்புரம் சாலாமேடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 32. இவர், விழுப்புரம் கே.கே., ரோடில் உள்ள டிஜிட்டல் டிசைனர் மற்றும் சிட்பண்ட் நிறுவனத்தில், கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி இரவு, நிறுவன உரிமையாளரான விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் கொடுத்த சீட்டு பணம், 20.89 லட்சம் ரூபாயை, மாம்பழப்பட்டு சாலை கிளை நிறுவனத்தில் கொடுப்பதற்காக பைக்கில் சென்றார்.ஆனால், கிளை அலுவலகத்தில் பணத்தை ஒப்படைக்காமல் தலைமறைவானார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்த பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், பிரபாகரன், சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார், அதில், அவருக்கு ரூ.30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள், அதனை திருப்பிக்கேட்டு பிரபாகரனுக்கு நெருக்கடி கொடுத்ததால், சிட்பண்ட் நிறுவன பணத்துடன் தலைமறைவானது தெரிந்தது.அவரிடமிருந்த, 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை