மேலும் செய்திகள்
சட்டசபை பேரவை குழு வருகை கலெக்டர் ஆலோசனை
28-Feb-2025
விழுப்புரம்:தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, குழு தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், குழு உறுப்பினர்கள் கிரி, துரை சந்திரசேகரன், சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் உட்பட பல அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஊரக வளர்ச்சி துறை சார்பில், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் விபரத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.தாட்கோ சார்பில் 6 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 38.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் ஆட்டோ, தையல் கடை, மொத்த விலை கடை, சுற்றுலா வாகனம், சரக்கு வாகனங்கள் மற்றும் வருவாய் துறை சார்பில் 62 ஆதிதிராவிட மக்களுக்கு இணையவழி பட்டாவை, குழு தலைவர் வழங்கினார்.பின், அவர் கூறுகையில், 'சிப்காட் தொழிற்பூங்காவில் காலணி தொழிற்சாலையை ஆய்வு செய்தோம். 3000 பேர் பணிபுரிகின்றனர். அதில், 95 சதவீதம் பேர் 15 கி.மீ., துாரத்திற்கு உட்பட்டோர். மகளிர் சுயஉதவிக்குழு தயாரித்த பொருட்களை சந்தைபடுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், சிவா, சட்டசபை செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் தேன்மொழி, எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Feb-2025