உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மீது பைக் மோதல்; போலீஸ் ஏட்டு காயம்

கார் மீது பைக் மோதல்; போலீஸ் ஏட்டு காயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார் சடன்பிரேக் போட்டு நின்றதால், பின்னால் பைக்கில் வந்த போலீஸ் ஏட்டு மோதியதில் படுகாயமடைந்தார்.விழுப்புரம், ஜனகராஜ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பாஷா மகன் ஷேக்அப்துல்லா, 39; வளத்தி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி தனது பைக்கில், விழுப்புரம் மருத்துவமனை ரோட்டில், தீயணைப்பு நிலையம் அருகே சென்றார்.அப்போது முன்னாள் சென்ற கார், தீடீரென பிரேக் போட்டு நின்றதால், அவரது பைக் காரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.அதில், ஷேக்அப்துல்லாவிக்கு காலில் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ