கிணற்றில் மிதந்த பைக் விக்கிரவாண்டியில் பரபரப்பு
விக்கிரவாண்டி,; விக்கிரவாண்டி அருகே தரை கிணற்றில் பைக் மிதந்ததால் பரபரப்பு நிலவியது. விக்கிரவாண்டி பெரியகாலனி சுடுகாட்டு பாதையில் ஆவுடையார்பட்டு எல்லையில் உள்ள தரை கிணற்றில் நேற்று காலை ஆந்திர மாநில பதிவெண் (ஏபி-28-சிசி-3932) பதிவெண் கொண்ட அப்பாச்சி பைக் மிதந்தது.தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பைக்கை வெளியே எடுத்தனர். கிணற்றில் யாரேனும் விழுந்து இறந்துள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடினர். 3 மணி நேரம் தேடியும் உடல் ஏதும் கிடைக்கவில்லை .பின்னர் பைக் பதிவெண் கொண்டு விசாரணை செய்ததில், அது போலி எண் என்பது தெரிய வந்தது. அதனால், குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர், பைக்கை கிணற்றில் தள்ளிவிட்டு சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இருப்பினும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.