| ADDED : ஆக 23, 2024 07:08 AM
வானுார்: வானுார் அருகே நள்ளிரவில் சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதி, பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் மயிலம் ரோட்டில் வசிப்பவர் ஏழுமலை. இவர் திருவண்ணாமலையில் வனவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாலாஜி, 21; பி.பி.ஏ, பட்டம் படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் உள்ள நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். பின் நள்ளிரவு, தனது யமாகா பைக்கில், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இருந்து பூத்துறை வழியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மணவெளி தனியார் கல்லுாரி சந்திப்பு அருகில் சென்றபோது, வேகத்தடையில் ஏறிய பைக், பாலாஜியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இடது பக்கத்தில் பள்ளப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.