உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., இளைஞர் செஞ்சிலுவை, உள்தர பிரிவு மற்றும் கிளியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமை, முதல்வர் வில்லியம் துவக்கி வைத்தார்வானுார் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ், மருத்துவ அதிகாரி அரவிந்த், திண்டிவனம் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அருளமுதம் வாழ்த்திப் பேசினார்.முகாமை கிளியனுார் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ரவி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்வமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.முகாமில், 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் வழங்கினர். உள்தர பிரிவு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !