மேலும் செய்திகள்
மினி லாரி மோதி தொழிலாளி பலி
08-Aug-2024
செஞ்சி: செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சேகர் 29; கீழ்பென்னாத்துாரில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் கடையை மூடி விட்டு தனது பைக்கில் சொக்கனந்தல் வந்து கொண்டிருந்தார். செஞ்சி-திருவண்ணாமலை மெயின் ரோடு கடலாடி குளம் கூட்ரோடு அருகே வந்த போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதே விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கடலாடி குளத்தை சேர்ந்த அருள், 54; என்பவரும் படுகாயம் அடைந்தார்.இதுகுறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Aug-2024