உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

விக்கிரவாண்டி: விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எடைச்சித்துார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 38; டைலர். இவர் கடந்த 12ம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் முயற்சியால் அவரது சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவ குழுவினர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்ய சான்று வழங்கினர்.இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு கிருஷ்ணமூர்த்தியின் உடலிலிருந்து சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து பிரித்து எடுத்தனர்.பிற்பகல் 2:00 மணியளவில் உடல் உறுப்புகள் தானம் செய்த கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு விழுப்புரம் ஆர்.டி.ஓ., சாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் மற்றும் டாக்டர்கள் பணியாளர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.பின், உடல் அவரது சகோதரர்கள் மணிகண்டன், செந்தில்குமார், பச்சமுத்து, சத்யராஜ் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை அடக்கம் செய்ய சொந்த ஊரான எடைச்சித்துார் கிராமத்திற்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Annamalai
செப் 15, 2024 08:03

இறந்தும் வாழும் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.


N Annamalai
செப் 15, 2024 08:02

இரண்டும் வாழும் அவர் ஆன்மா சாதி அடையட்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை