மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, தாசில்தார் செல்வமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். முகையூர் பி.ஆர்.சி., பயிற்றுனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் முகையூர் வட்டாரத்தைச் சேர்ந்த 40 பள்ளி ஆசிரியர்கள் 10 தலைமை ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பயிற்சி மேற்கொண்டனர். தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் சேமசுந்தரி மேற்பார்வையில் பயிற்சி முகாம் நடந்தது. மாநில புள்ளியியல் ஆய்வாளர் லட்சுமி தேவி, மக்கள் தொகை கணக்கெடுப்பு தாசில்தார் ஸ்ரீதேவி, கூடுதல் தாசில்தார் பாலச்சந்தர், உதவியாளர் சந்தியா, ஆர்.ஐ., நித்யா, லீலாவதி, சகாயராணி உட்பட பலர் பங்கேற்றனர்.