மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி பேசுகையில், ‘2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடத்தப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றாலும், உலக மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மிகவும் துல்லியமான தரவுகள் அரசு நலத்திட்டங்களை சரியாக செயல்படுத்த உதவும். சமூக, பொருளாதாரம், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகள், குடிநீர் வசதிகளை திட்டமிட இந்த கணக்கெடுப்பு உதவும்’ என்றார். பயிற்சி வகுப்பில் பயிற்றுநர்கள் வேல்முருகன், அய்யப்பன், வானுார் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர்.