சிவசக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
திண்டிவனம்: திண்டிவனம் சாய்லட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று மாலை 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 4.00 மணிக்கு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. 6:00 மணிக்கு முச்சந்தி உற்சவம் நடந்தது.தொடர்ந்து காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 108 அஷ்டோத்ர சதநாமாவளி பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.