உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் பிறந்தநாள் விழா; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதல்வர் பிறந்தநாள் விழா; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் முதல்வர்பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் டி. புதுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பயனாளிகளுக்கு தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பிரவி வரவேற்றார்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,சாவித்திரி, துணைத் தலைவர் ரமேஷ், கிளை செயலாளர் செல்வம், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ