உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு உதவிகள் பெற நலவாரியத்தில் உறுப்பினராக கலெக்டர் அறிவுரை

அரசு உதவிகள் பெற நலவாரியத்தில் உறுப்பினராக கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் : அரசு உதவிகள் பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நலவாரியத்தில் தகுதியுள்ள பெண்கள் உறுப்பினராக சேரலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளைக் களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து அவர்கள் பாதுகாப்பாக வாழ நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.வாரியத்திற்கென கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதள பயன்பாடு தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நலவாரியத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.gov.inஎன்ற இணைய தளம் மூலம் அல்லது அருகே உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராக சேரலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ