அவசர சிகிச்சை கட்டுமான பணி கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 35 கோடி ரூபாய் மதிப்பில் 4 மாடிகளுடன் 100 படுக்கை வசதியுடன் கூடிய அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், இப்பணியை ஆய்வு செய்து, தாய், சேய் நல பிரிவில் மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, காத்திருப்போர் கூடத்தில் அடிப்படை வசதிகள் குறித்து நோயாளிகள், அவர்களின் உதவியாளர்களிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்டறிந்தார்.கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகம் கட்ட இடத்தையும் ஆய்வு செய்தார். கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி பொறியாளர் இம்ரான்கன் உடனிருந்தனர்.