உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெடுஞ்சாலை பணிக்கு கட்டுமான பொருள் வழங்கியோர் புகார் மனு

நெடுஞ்சாலை பணிக்கு கட்டுமான பொருள் வழங்கியோர் புகார் மனு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் 41.56 லட்சம் ரூபாய் தராமல் மோசடி செய்துள்ளதாக, கட்டுமான பொருள்களை வழங்கியோர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, விழுப்புரம் சிவசக்தி ஜல்லி சப்ளையர் லோகநாதன், கீர்த்தி டிரான்ஸ்போர்ட் நல்லையன், ராஜேந்திரன், அற்புதராஜ் உள்ளிட்டோர், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துளள் புகார் மனு:நாங்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பில் நடந்து வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு, ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை, திருப்பத்துாரைச் சேர்ந்த எச்.டி., இன்பரா நிறுவனம், தருண் கன்ட்ஸ்ரக் ஷன் ஆகியோருக்கு வழங்கி வருகிறோம்.கட்டுமான பொருட்கள் வழங்கியதற்கான தொகையை அவர்கள் தராமல் உள்ளனர். எங்களை போல், 10க்கும் மேற்பட்டோருக்கு 41.56 லட்சம் ரூபாய் வரை கொடுக்காமல், ஏமாற்றி வருகின்றனர். நேரில் சென்று கேட்டபோது, தேசிய நெடுஞ்சாலை பில் வந்த உடன் தருவதாக கூறி அலைகழித்து வருகின்றனர். அவர்கள் வழங்கிய காசோலையும் திரும்பிவிட்டது.தற்போது, பழைய ஒப்பந்த நிறுவனத்திற்கு பதிலாக, வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு அந்த இடத்தில் பணியை மாற்றியுள்ளனர். இதனால், அவர்களிடம் பணத்தை கேட்டால், பழைய நிறுவனத்தினரிடம் போய் கேளுங்கள் என கூறுகின்றனர். முதன்மை நிறுவனமான தருண் நிறுவத்தினரும் பதில் கூறாமல் அலைகழித்து வருகின்றனர். எங்களுக்கு உரிய தொகையை, அந்த ஒப்பந்த நிறுவனத்தினரிமிருந்து பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ