உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மகளிர் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

அரசு மகளிர் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில், விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை வகித்தார். சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., தினகரன் தொடங்கி வைத்து பேசினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்று, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெருகி வரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான மொபைல்போன் ஆப்களில் வரும் கடன் மோசடிகள் குறித்தும், சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏற்படும் பாதிப்புகளுக்கு 1930 உதவி எண், cybercrime.gov.inதொடர்புகொள்ளவும் விளக்கமளித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி