அக்னி குளத்தில் விழுந்த பக்தர் பலி
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் குளத்தில் விழுந்த பக்தர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருத்தேர் விழா நடந்தது. அதனையொட்டி அதிகாலையில் அங்குள்ள அக்னி குளத்தில் குளிக்கச் சென்ற பக்தர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தார். மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர்.இறந்த நபர் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த ஆதித்யா மகன் கிரிபாபு, 39; என தெரியவந்தது. புகாரின்பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.