| ADDED : ஜூலை 14, 2024 03:41 PM
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து நேற்று முன்தினம் ஓட்டு எண்ணும் பணி முடிவடைந்தது. ஓட்டு பதிவிற்காக திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மாவட்டதேர்தல் சேமிப்பு கிடங்கிலிருந்து 662 ஓட்டு பதிவு இயந்திரங்கள், 357 விவி பேடு, 330 கண்ட்ரோல் யூனிட் கொண்டு வரப்பட்டன.நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் உதவி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ் முன்னிலையில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் லாரியில் ஏற்றி மாவட்ட தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.தலைமையிடத்து துணை தாசில்தார் புருேஷாத்தமன், தேர்தல் தனி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், நாகராஜ், வினோத்குமார், தயாநிதி உட்பட வருவாய் துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.