மேலும் செய்திகள்
தென்னம்பாக்கம் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்
07-Feb-2025
செஞ்சி : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சியில் தி.மு.க.,வினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதனையொட்டி, 1 மற்றும் 2 வது வார்டில் சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பேரூராட்சி சேர்மன் மொக்தியார் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு, பெண்கள் வாழ்த்து தெரிவித்து, இந்தி திணிப்பிற்கு எதிராகவும் கோலமிட்டனர். துணைச் சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் அன்புசெல்வன் வரவேற்றார். செஞ்சி கூட்ரோட்டில், நகர செயலாளர் கார்த்திக் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் சங்கர், சிவக்குமார், பொன்னம்பலம், வழக்கறிஞர் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Feb-2025