மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட இறகு பந்துக் கழகம் மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான இறங்குப் பந்து போட்டி நடந்தது.விழுப்புரம் சதா பேட்மிட்டன் அகாடமியில் நடந்த போட்டியில், 11 வயதுக்கு உட்பட்ட மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் அணியினர் பங்கேற்று விளையாடினர். திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலுார், செஞ்சி, கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு பிரிவுகளில், சுழற்சி முறையில் போட்டிகள் நடந்தது. முடிவில் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, மாவட்ட இறகு பந்துக்கழகம் மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து, பரிசு கோப்பைகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார், விழுப்புரம் இறகு பந்தாட்ட கழக செயலாளர் சதாசிவம், துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.