உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.ராதாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்டசேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ரவிதுரை வரவேற்றார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு தின விழாவை கிளைகள் தோறும் கொண்டாடுவது. முப்பெரும் விழாவில் பங்கேற்பது. தெருமுனை பிரசாரம் செய்வது. மகளிர் அணி உறுப்பினர் சேர்ப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இளைஞரணி அமைப்பாளர் பாரதி, கண்காணிப்பு குழு எத்திராசன், பொருளாளர் கண்ணையன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை