தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் வளவனுார் பேரூராட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.பேரூராட்சி செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், வழக்கறிஞர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், சேர்மன் மீனாட்சி ஜீவா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களையும், அ.தி.மு.க.,வோடு வைத்துள்ள கள்ள கூட்டணியையும் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டங்கள் நுழைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும்' என்றார்.துணைத் தலைவர் அசோக்குமார், நகர பொருளாளர் ரகுமான், வழக்கறிஞர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ராஜா சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.