உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா

தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விழுப்புரம் : காணை ஒன்றிய தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.காணை அடுத்த கக்கனுார், அனுமந்தபுரம், பனமலைப்பேட்டை, கல்யாணம்பூண்டி, மேல்காரணை, காங்கேயனுார், பள்ளியந்துார் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. காணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி வழங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழா ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர்கள் ராஜா, மாவட்ட கவுன்சிலர் ஆர்.முருகன், ஆர்.பி.முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பழனி, கருணாகரன், நாராயணசாமி, அரங்கநாதன் மற்றும் அணி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி