உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்வு

மயிலம்: மயிலம் அடுத்த பெலாக்குப்பம் ஊராட்சி, வேம்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுமறு கட்டமைப்புக் கூட்டம் நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர், பாக்யராஜ் தலைமை தாங்கி பேசினார்.தலைமை ஆசிரியை பரிமளா முன்னிலை வகித்தார்.வட்டார கல்வி பார்வையாளர் பாக்கியலட்சுமி மேற்பார்வையில் கல்வி மேலாண்மைக் குழு தலைவர் சரளா, துணைத் தலைவர் சகுணா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் சக்திவேல், ராஜா, அறிவழகன், காத்தவராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பிரதிநிதிகள் சாந்தி, அய்யனார் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர்உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ