உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமையலர் காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்

சமையலர் காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதி அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். நலத்துறை பள்ளி விடுதி அடிப்படை பணியாளர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் நடராஜன் வரவேற்றார், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் அய்யனார், முன்னாள் மாநில துணைப்பொதுச் செயலாளர் அருணகிரி முன்னிலை வகித்தனர். ராஜேந்திரன், வீரமணி, நேதாஜி, வடிவேல், ரூபன், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், விடுதியில், சமையலராக பணியாற்றி வரும் அனைவரையும் அரசு ஆணைப்படி, பணி மூப்பு அடிப்படையில் இரவு காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். தற்போது, துறையில் காலியாக உள்ள அனைத்து சமையலர் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !