உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயானக் கொள்ளையில் பக்தர்களுக்கு அன்னதானம்

மயானக் கொள்ளையில் பக்தர்களுக்கு அன்னதானம்

திண்டிவனம் : திண்டிவனம் மயானக் கொள்ளையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திண்டிவனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மயானக்கொள்ளை ஊர்வலம் நடந்தது.இதில் பங்கேற்ற பக்தர் களுக்கு 23ம் ஆண்டு அண்ணாமலையார் அன்ன தானக் குழுவின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சண்முகம் அன்னதானம் வழங்கினார்.மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமர், பாசறை செயலாளர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் பாலச்சந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் குமரவேல், சரவணன், முருகன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி